இஸ்ரேல் பிரதமர் பதவி: நாணயத்தை சுண்டிவிட்டு முடிவு செய்யலாம்!
இஸ்ரேல் பிரதமராக யார் முதலில் பதவி ஏற்றுக் கொள்வது என்பதை நாணயத்தை சுண்டி விடுவதன் மூலம் முடிவு செய்யலாம் என பிரதமர்


இஸ்ரேல் பிரதமராக யார் முதலில் பதவி ஏற்றுக் கொள்வது என்பதை நாணயத்தை சுண்டி விடுவதன் மூலம் முடிவு செய்யலாம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பென்னி கான்ட்ஸ் ஆகியோரிடம் இஸ்ரேல் பெய்டெனு கட்சித் தலைவர் அவிக்டோர் லீபர்மன் தெரிவித்துள்ளார். இவரது கட்சியின் ஆதரவைப் பெற்றவர்தான் இஸ்ரேலின் அடுத்த பிரதமராக முடியும் என்ற நிலை உள்ளதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கூட்டணி அரசு அமைப்பது குறித்து அதிபர் ரூவன் ரிவ்லின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், மொத்தமுள்ள 120 நாடாளுமன்ற தொகுதிகளில் 55 பேரின் ஆதரவு பிரதமர் நெதன்யாகுவிற்கு கிடைத்துள்ளது. அதே சமயம், பென்னி கான்ட்ஸின் புளூ அண்ட் ஒயிட் கட்சிக்கு 57 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர்.
இருப்பினும், புதிய அரசு அமைப்பதில் லீபர்மனின் இஸ்ரேல் பெய்டெனு கட்சியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த இரு கட்சிகளும் கூட்டணி அரசை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் பதவியை இருகட்சி தலைவர்களும் சம கால அளவில் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், யார் முதலில் பிரதமர் பதவியை ஏற்பது என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், பிரதமர் பதவியை ஏற்று யார் முதலில் அரசை அமைக்கலாம் என்பதை நாணயத்தைச் சுண்டி விடுவதன் மூலம் முடிவு செய்யலாம் என நெதன்யாகு, பென்னி கான்ட்ஸிடம் லீபர்மன் யோசனை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...