"பிரதமர் மோடியும், பிரதமர் இம்ரானும் சந்தித்துக்கொண்டால்.." : என்ன சொல்கிறார் டிரம்ப்?

மோடியும், இம்ரான் கானும் சந்தித்துக்கொண்டால், அந்த சந்திப்புக்குப் பிறகு நிறைய நல்ல விஷயங்கள் வெளிவரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப்
பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப்


மோடியும், இம்ரான் கானும் சந்தித்துக்கொண்டால், அந்த சந்திப்புக்குப் பிறகு நிறைய நல்ல விஷயங்கள் வெளிவரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

ஐ.நா. பொதுக் கூட்டத்தையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இன்று சந்தித்தனர். மோடியும், டிரம்பும் சந்தித்துக்கொள்வது இது 4-வது முறையாகும். இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், 

"பிரதமர் மோடியும், பிரதமர் இம்ரானும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்ட பிறகு, இருவரும் சந்தித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த சந்திப்பில் இருந்து நிறைய நல்ல விஷயங்கள் வெளிவரும் என்று நினைக்கிறேன்" என்றார். மேலும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் தொடங்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நேற்று (திங்கள்கிழமை) சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தியாவும், பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்தால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது இந்தக் கருத்தை தெரிவித்திருப்பதன் மூலம் மத்தியஸ்தம் செய்வதில் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை விலக்கி கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் என்பதையும், இந்த விவகாரத்தில் எந்தவொரு மூன்றாவது நபரும் மத்தியஸ்தம் செய்வதில் விருப்பமில்லை என்பதையும் இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com