6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாக வாங் யீ நிகழ்த்திய உரை

சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாக அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடரவல்ல 

News image
Updated On :25 செப்டம்பர் 2019, 9:09 am

DIN

சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாக அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடரவல்ல வளர்ச்சி இலக்கிற்கான ஐ.நா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

இம்மாநாட்டில் வாங் யீ நிகழ்த்திய உரையில், 2030-ஆம் ஆண்டுக்கான தொடரவல்ல வளர்ச்சி நிரல் உலக வளர்ச்சி ஒத்துழைப்பின் புதிய கட்டத்தைத் துவக்கியுள்ளது. வளரும் நாடுகள் கவனம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு உண்மையாக முக்கியத்துவம் அளித்து பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும், பலதரப்பு வாதத்தை உறுதியாக ஆதரித்து, சர்வதேச அமைப்பு முறையில் ஐ.நா ஆற்றும் மையப் பங்கிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவிரவும், மனித குலத்தின் இனிமையான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், சர்வதேசச் சமூகத்துடன் சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று வாங் யீ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.