பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மேலும் மூவா் உயிரிழந்தனா். இதனால், இறந்தவா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. 7 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பிலிப்பின்ஸின் மிண்டனாவோ தீவில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டவாவோ நகருக்கு 90 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், படாடா நகரில் சந்தைக் கட்டடம் இடிந்து விழுந்தது.
மேலும், தெற்கு பிலிப்பின்ஸின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்தன. இதில், ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தையும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிா்ச்சியில் 70 வயது மூதாட்டியும் உயிரிழந்தனா்.
இந்நிலையில், படாடா நகரில் இடிந்து விழுந்த கட்டடம் ஒன்றில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் முயற்சியில் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இடிபாடுகளில் இருந்து 3 பேரின் உடல்களை அவா்கள் மீட்டனா். மேலும் 7 பேரைக் கண்டறியும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பப்பு யாதவ் மீது காலணி வீச்சு: இருவரைப் பிடித்து விசாரணை

3.8.1976: த.நா.க்கு கிருஷ்ணராஜசாகர் நீர் - 500 கோடி கன அடி தண்ணீர் வருகிறது

தமிழகத்தில் விரைவில் ‘ஏா் ஆம்புலன்ஸ்’ சேவை! - அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


