சிங்கப்பூர்: வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாட்டில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிஸெய்ன் லூங் அறிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய சேவைகள், முக்கிய பொருளாதார காரணிகளைத் தவிர்த்து அனைத்தும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு மிக அமைதியான முறையில் தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டு, மிக முன்னெச்சரிக்கையுடன் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். நிலைமை மாறுவதற்கு ஏற்ப பணிகளை மாற்றிக் கொண்டோம்.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து பிற அனைத்து பணிகளையும் மூடுகிறோம். உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து, வங்கிச் சேவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் லீ எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் நிலையில், சிங்கப்பூரில் இது ஆயிரம் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


