உலகளவில் கரோனாவால் பலி எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது.


உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது.
சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியுள்ளது. அந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. உலகளவில் கரோனாவுக்கு இதுவரை 114,201 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் அந்த வைரஸால் 1,852,535 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 423,400 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் கரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக கரோனா வைரஸால் 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22,115 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 17,209 பேரும், இத்தாலியில் 19,899 பேரும், பிரான்சில் 14,393, பிரிட்டனில் 10,612 பேரும் கரோனாவால் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸால் 9,205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 331 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...