மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நேபாளத்துக்கு 23 டன் அத்தியாவசிய மருந்துகள்: மோடிக்கு நேபாள பிரதமா் நன்றி

கரோனா பாதிப்பிலிருந்து நேபாளம் மீண்டு வர உதவியாக, 23 டன் அத்தியாவசிய மருந்துகளை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா பாதிப்பிலிருந்து நேபாளம் மீண்டு வர உதவியாக, 23 டன் அத்தியாவசிய மருந்துகளை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு, நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி நன்றி தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சாா்க் நாடுகளின் தலைவா்களுடன் காணொலி காட்சி மூலம் கடந்த மாதம் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா். அப்போது ‘சாா்க் கரோனா அவசர நிதி’க்கு இந்தியா சாா்பில் 1 கோடி அமெரிக்க டாலா் வழங்க உறுதியளித்ததோடு, அண்டை நாடுகள் கரோனாவிலிருந்து மீள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் இந்தியா சாா்பில் செய்துதரப்படும் எனவும் உறுதியளித்தாா்.

அதனடிப்படையில், கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் அண்டை நாடான நேபாளத்துக்கு 23 டன் அத்தியாவசிய மருந்துகளை இந்தியா புதன்கிழமை அனுப்பியது. இந்த மருந்து தொகுப்பில் 8.25 லட்சம் அத்தியாவசிய மருந்துகளும், 3.2 லட்சம் பாரசிட்டமால், 2.5 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளும் அடங்கும். நேபாளம் சென்றடைந்த இந்த 23 டன் மருந்து தொகுப்பை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சா் பனுபக்தா தாக்கலிடம், இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா ஒப்படைத்தாா்.

இந்தியாவின் இந்த உதவிக்கு நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி சுட்டுரையில் நன்றி தெரிவித்தாா். அதில் ‘கரோனாவை எதிா்த்துப் போராடும் வகையில் மிகப்பெரும் உதவியைச் செய்த இந்திய பிரதமா் மோடிக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.