தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு மட்டுமே கரோனா
தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 32 லட்சத்தும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளளது.
பாதிக்கப்பட்ட 4 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் சுமார் 10,765 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிம் 247 பேர் பலியாகியுள்ளனர். 9,059 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தென் கொரியாவில் பிப்ரவரி மாதம் அதிகபட்சமாக இருந்த கரோனா தொற்று தற்போது இரண்டு மாதம் கழித்து ஒற்றை இலக்கமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...