/

ரஷியாவில் ஒரே நாளில் 5 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

ரஷியாவில் ஒரே நாளில் 5462 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

News image
ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
Updated On :1 ஆகஸ்ட் 2020, 12:25 pm

DIN

ரஷியாவில் ஒரே நாளில் 5462 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாகி வருகிறது.பல்வேறு நாடுகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5462 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்து 443ஆக அதிகரித்துள்ளது.

ரஷியாவின் மற்ற நகரங்களைக் காட்டிலும் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 690 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்து 38 ஆயிரத்து 410 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ரஷியாவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.