ரஷியாவில் ஒரே நாளில் 5394 பேருக்கு கரோனா பாதிப்பு
ரஷியாவில் ஒரே நாளில் 5394 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


ரஷியாவில் ஒரே நாளில் 5394 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாகி வருகிறது.பல்வேறு நாடுகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5394 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 56 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவின் மற்ற நகரங்களைக் காட்டிலும் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்து 53 ஆயிரத்து 593 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ரஷியாவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 207 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...