"பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டவில்லை. எலான் மஸ்க் நேரில் வந்து இதுகுறித்து ஆய்வு செய்யட்டும்." என எகிப்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக அதிசயமாகக் கருதப்படும் பிரமிடு குறித்து பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. பிரமிடின் கட்டுமானம் குறித்து அறிவியலாளர்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்கின்றன.
இந்நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனமாகும். இதன் தலைவர் எலான் மஸ்க், " பிரமிடுகள் நிச்சயமாக வேற்றுகிரகவாசிகளால் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும்." எனத் தனது சுட்டுரையில் தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதமானது.
எலான் மஸ்க்கின் இந்தக் கருத்துக் குறித்து பேசிய எகிப்து வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரைனா அல் மஸ்கட், “பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றி ஆராயவும், பிரமிட் கட்டுபவர்களின் கல்லறைகளைப் பார்க்கவும் நான் உங்களையும், ஸ்பேஸ்எக்ஸ் குழுவினரையும் அழைக்கிறேன். நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்.” என பதிலளித்துள்ளார்.
எகிப்து பிரமிடு குறித்து இருவரும் மோதிக் கொள்ளும் விவகாரம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் எல்லம்மா தோற்ற போஸ்டர்!

இரண்டே நாள்களில் பான் இந்திய நடிகர்களின் வசூலை முறியடித்த ஸ்பைடர் மேன்!

ஆக. 4,5,6 தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்
5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



