பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெய்ரூட் துறைமுக பகுதியில் வெடிவிபத்து: 3,00,000 மக்கள் இடம்பெயர்வு

பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தின் எதிரொலியாக 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பெய்ரூட் கவர்னர் தெரிவித்துள்ளார்.

News image
பெய்ரூட் துறைமுக பகுதியில் வெடிவிபத்து: 3,00,000 மக்கள் இடம்பெயர்வு
Updated On :5 ஆகஸ்ட் 2020, 4:08 pm

DIN

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தின் எதிரொலியாக 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பெய்ரூட் கவர்னர் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் துறைமுக பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடையுடைய அம்மோனியம் நைட்ரேட் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெடித்துச் சிதறியது. பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இது குறுத்து பெய்ரூட் கவர்னர் மர்வான் அபூத் கூறியதாவது, பெய்ரூட் துறைமுக பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 3,00,000 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெடிவிபத்தால் துறைமுக பகுதியில் 30 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.