ரஷிய துணைப் பிரதமர் யூரி ட்ரூட்னெவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் ரஷியாவும் உள்ளது.
ரஷியாவில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் மேலாகப் பதிவாகி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் துணைப் பிரதமரான யூரி ட்ரூட்னெவுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரஷிய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்கு முன் கரோனா பரிசோதனை மேற்கொண்ட ட்ரூட்னெவிற்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் 5,102 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகயிள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 9,02,701 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 15,231 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


