ஆஸ்திரேலியாவில் மேல் நோக்கிப் பறந்த அருவி
ஆஸ்திரேலியாவில் வீசிய பலத்தக் காற்றால் மேல் நோக்கி பறந்த அருவியின் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேல்நோக்கிப் பறந்த அருவி
மேல்நோக்கிப் பறந்த அருவி
ஆஸ்திரேலியாவில் வீசிய பலத்தக் காற்றால் மேல் நோக்கி பறந்த அருவியின் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள ராயல் தேசிய பூங்காவில், தண்ணீர் கீழே விழுவதற்குப் பதிலாக ஒரு குன்றின் மீது பின்னோக்கி பறந்தது.
மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் கண்கவர் தலைகீழ் நீர்வீழ்ச்சி கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ராயல் தேசியப் பூங்கா பகுதியில் வீசிய புயல் அலைகளால் அருவியில் கொட்டிய நீர் மேல்நோக்கி பறந்தது
பொதுவாக கடலில் இருந்து அதிக காற்று வந்து குன்றுகளைத் தாக்கும்போது தலைகீழ் நீர்வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன. அது தண்ணீரை வந்த வழியே மேலே தள்ளும்.
புண்டீனா நகரமும் அருகிலுள்ள மியன்பாரும் வானிலை காரணமாக சிறிய அளவிலான வெள்ளம் பாதிப்பை எதிர்கொண்டன. பெரு மழை காரணமாக நகரத்தின் முக்கிய படகு சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...