மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
பாங்காக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 8:00 am

DIN

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாய்லாந்தில் முடியாட்சியை எதிர்த்தும், எதிர்க்கட்சிகளின் மீதான் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரியும் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஒரு மாதமாக  தினசரி நடைபெறும் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ள மாணவர் குழுக்களுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டதிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் இராணுவத் தலைவரான பிரயுத் சான்-ஓச்சா பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் தாய்லாந்தில் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கோரியும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டது.

மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தில் வயது மூத்தவர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நடைபெற்ற போராட்டங்களில் கட்டுப்பாடுகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் மூன்று பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 மாணவத் தலைவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.