பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அமெரிக்க மக்கள் உயிரிழக்க காரணம் சந்தர்ப்பவாத அரசியல்!

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட பிறகு, அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள், அறிவியல்பூர்வ முறையிலான நோய் தடுப்பை கடைப்பிடிக்கவில்லை.

News image

Opportunistic politics is the cause of the death of the American people!

Updated On :19 ஆகஸ்ட் 2020, 9:19 am

DIN

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட பிறகு, அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள், அறிவியல்பூர்வ முறையிலான நோய் தடுப்பை கடைப்பிடிக்கவில்லை.

மாறாக, அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகின்றனர். நோய் தடுப்பில் தனது திறமையற்ற பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் விதமாக, வைரஸை சீனாவுடன் தொடர்பு உடையதாக அவர்கள் தீய நோக்கத்துடன் அவதூறு பரப்பி உள்ளனர். வரும் தேர்தலில் சாதகமான நிலையை உருவாக்கும் வகையில், முன்கூடியே பொருளாதார நடவடிக்கை மீட்பு மற்றும், பள்ளி திறப்பை மேற்கொண்டுள்ளதால், அமெரிக்காவின் பல மாநிலங்களில் தொற்று நோய் மீண்டும் தீவிரமாகியுள்ளது.

அமெரிக்க அரசில்வாதிகளின் இச்செயல்களாலே தொற்று நோயில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள் மேலும் கடினமான நிலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மிகவும் அவசர கடமையாகும். ஆனால், இந்த அரசியல்வாதிகள் இன்னும் நோய் தடுப்புப் பணியில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, வாக்குகளில் கவனம் செலுத்திய வரும் அவர்கள், சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகின்றனர். இதன் விளைவாக, அமெரிக்காவில் நோய் தடுப்புப் பணிக்கு மேலதிக உறுதியற்ற காரணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உண்மையில், அரசியல் சந்தர்ப்பவாதம், அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாது. அமெரிக்க அரசியல்வாதிகள், பொறுப்பைத் தட்டிக்கழிப்பதை நிறுத்தி, அமெரிக்க மக்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்தை முதன்மை இடத்தில் வைத்து, வெகுவிரைவாக நோய் தடுப்புப் பணியை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தகவல்-சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.