ஆப்பிள் நிறுவனம் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் அமெரிக்க நிறுவனமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
பல்வேறு தொழில்நுட்பப் போட்டிகள் நிலவும் உலகில் 20 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைப் பெற்ற இரண்டாவது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் வளர்ந்துள்ளது. மாறி வரும் தொழில்நுட்ப சூழலிலும் அதிக அளவிலான முதலீட்டாளர்களை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கரோனா பரவல் சூழ்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளன. ஆனால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பில் குறிப்பிடத்தக்க உயர்வை அடைந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் தனது 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து 2 வருட இடைவெளியில் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைத் தொட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 60% உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனம் மூன்றாம் காலாண்டில் 59.7 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.
2 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனமாக சவுதி அரேபியாவின் அரம்கோ உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


