தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

அமெரிக்கா: சிகிச்சையளிக்கத் திணறும் கிராமப்புற மருத்துவமனைகள்

அமெரிக்காவில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால்,  கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதியின்றி மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

News image

அமெரிக்காவில் கரோனாவுடன் போராடும் கிராமப்புற மருத்துவமனைகள்

Updated On :2 டிசம்பர் 2020, 11:36 am

அமெரிக்காவில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால்,  கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதியின்றி மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

அமெரிக்காவில் நகர்புறங்களில் மட்டுமே அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், குளிர்காலத்தின் தாக்கத்தால் கிராமப் புறப் பகுதிகளிலும் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் கிராமப் பகுதியிலுள்ள மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. மிசெளரியின் மெம்பிஸ் கிராமப் பகுதியில் உள்ள ஸ்காட்லாந்து கவுன்டி மருத்துவமனையில் இருந்த  படுக்கைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன.

இந்த கிராமப்புற மருத்துவமனையில் 142 மருத்துவப் பணியார்கள் இருந்த நிலையில், கரோனாவால் தற்போது 6 மருத்துவர்களும், 75 செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக படுக்கைகளுக்கும், அவர்களை பராமரிப்பதற்காக மருத்துவ பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு கூட பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நியூயார்க் மாகாணத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஸ்டேட்டன் தீவில் உள்ள கரோனா அவசர சிகிச்சை மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நியூ யார்க் மாகாணத்தில் பரவிவந்த கரோனா வைரஸ் கோடைகாலத்தில் பாதியாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் இந்த மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.