டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலகளவில் கரோனா பாதிப்பு 6.68 கோடியைக் கடந்தது 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 68 லட்சத்து 47 ஆயிரத்து 41 கோடியைக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 15,34,344 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 68 லட்சத்து 47 ஆயிரத்து 41 கோடியைக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 15,34,344 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் 66,847,041 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,534,344 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 4,62,35,090 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 1,90,77,607 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,026  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா பரிசோதனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை  1,49,83,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,87,825 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 87,87,738 பேர் குணமடைந்துள்ளனர், 59,07,862 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 26,261பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

இந்தியா 96,44,529 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,40,216 ஆக உள்ளது. இதுவரை 90,99,946 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அண்மைக் காலமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினசரி பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.