முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஈரானில் புதிதாக 11 ஆயிரம் பேருக்கு கரோனா

​ஈரானில் புதிதாக 11,023 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 டிசம்பர் 2020, 12:53 pm


ஈரானில் புதிதாக 11,023 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,62,397 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 323 பேர் நோய்த் தொற்றால் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 50,917 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 1,710 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 5,780 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு இதுவரை 7,54,224 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரானில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் கரோனா பாதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.