வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பிரிட்டனில் ஃபைஸர் தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவருக்கு ஒவ்வாமை

பிரிட்டனின் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

பிரிட்டனில் ஃபைஸர் தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவருக்கு ஒவ்வாமை

Updated On :10 டிசம்பர் 2020, 9:00 am

பிரிட்டனின் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து இருவருக்கும் மாற்று மருந்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.

அதில், யாருக்கேனும் சில மருந்துகளை செலுத்திக் கொண்டாலோ, உணவாலோ ஒவ்வாமை ஏற்படும் என்று தெரிந்திருந்தால், அவர்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில்லாமல், கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்கள் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்ற ஒவ்வாமைகள் ஏற்படும். அது வழக்கமானதுதான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஃபைஸா்-பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அண்மையில் அங்கீகாரம் அளித்தது. அதையடுத்து, அந்தத் தடுப்பூசியை நாடு முழுவதும் பொதுமக்களுக்குச் செலுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வெஸ்ட் மிட்லாண்ட் பிராந்தியம், காவன்ட்ரி நகரிலுள்ள பொது மருத்துவமனையில் 90 வயதாகும் மாா்கரெட் கீனன் என்பவருக்கு முதல் முறையாக அந்தத் தடுப்பூசி அதிகாலை 6.30 மணிக்கு போடப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பிரம்மாண்டமான தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள 50 கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுத்தும்.

மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வரும், அல்லது வேறு நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பும் 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முதல் கட்டமாக கரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

ஃபைஸா்-பயான்டெக் கரோனா தடுப்பூசி பல மாதங்களாக மனிதா்களுக்குச் செலுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டு வந்தது.

அந்தப் சோதனைகளின் முடிவுகளை மிகவும் கவனமாக ஆய்வு செய்த பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதார சேவைப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பு (எம்ஹெச்ஆா்ஏ), தங்களது பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் தேவைகளை ஃபைஸா்-பயான்டெக் தடுப்பூசி முழுமையாக நிறைவு செய்வதாகத் தெரிவித்தது.

கரோனாவிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அந்தத் தடுப்பூசியை அவா்களுக்குப் பரவலாகச் செலுத்தலாம் எனவும் எம்ஹெச்ஆா்ஏ அங்கீகாரம் அளித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.