ஆப்கனில் பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை
ஆப்கனில் பெண் பத்திரிக்கையாளர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஆப்கனில் பெண் பத்திரிக்கையாளர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆப்கனில் உள்ள தனியார் வானொலி தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் பெண் பத்திரிக்கையாளர் மலலை மிவண்ட். இவரை நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத்தில் இன்று காலை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதில் மலலை மிவண்ட் பலியானார். மேலும் இந்த தாக்குதலில் அவரின் ஓட்டுநரும் பலியானார். தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக நவ.12ஆம் தேதி ஆப்கனில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அல்யாஸ் என்கிற பத்திரிக்கையாளர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...