தென்கொரிய நாட்டில் கரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக கப்பல்களில் உள்ள கண்டெய்னர் பெட்டிகள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. அதன்காரணமாக அன்றாட வாழ்க்கை முறையே மாறியது.
பல்வேறு நாடுகளில் அதிகரித்து வந்த கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது, பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தென்கொரிய நாட்டில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த கப்பல் கண்டெய்னர்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்காரணமாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமுகாம்களின் எண்ணிக்கையையும் அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
தென்கொரியாவில் இதுவரை 40 ஆயிரத்து 786 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


