ரஷியாவில் புதிதாக 28,080 பேருக்குத் தொற்று
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,080 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,080 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 28,080 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 26,53,928 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 6,425 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 46,941 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 21,06,235 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,00,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 500க்கும் அதிகமானோர் பலியாகின்றனர். உலகளவில் கரோனா பாதிப்பில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...