உலகளவில் கரோனா பாதிப்பு 7.38 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 7 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 725 கோடியைக் கடந்தது.


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 7 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 725 கோடியைக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 1,641,741 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் 7,38,09,725 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 16,41,741 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 5,18,19,551 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,03,48,433 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,07,159 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,71,43,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,11,068 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 1,00,07,853 பேர் குணமடைந்துள்ளனர், 68,24,858 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 28,305 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியா 99,32,908 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,44,130 ஆக உள்ளது. இதுவரை 94,56,449 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...