அமெரிக்காவின் வடகிழக்கில் பனிப்புயல் தாக்கியதில் 5 பேர் பலி
அமெரிக்காவின் வடகிழக்கில் பனிப்புயல் தாக்கியதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

winter storm

winter storm
அமெரிக்காவின் வடகிழக்கில் பனிப்புயல் தாக்கியதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அட்லாண்டிக் பகுதியிலிருந்து வடகிழக்கு வரையிலும் நூற்றுக்கணக்கான வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாகப் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிர்த்துவருகின்றனர்.
விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நியூயார்க்கில் பனிப்புயலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும் பென்சில்வேனியாவின் கிளிண்டனில் வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று குவிந்து கிடந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...