ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமெரிக்கா: ஜோ பைடனின் ஆலோசகருக்கு கரோனா

அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகா்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு  கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:23 pm

DIN

அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகா்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு  கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லூசியாணா மாகாண எம்.பி.யான அவா், ஜோ பைடனின் புதிய அரசில் அவருக்கு முதுநிலை ஆலோசகா் பொறுப்பேற்பதற்காக தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யவுள்ளாா். இந்தச் சூழலில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜாா்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் நடைபெற்ற செனட் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய இரு நாள்களுக்குப் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகிள்ளது.

ஜோ பைடனை ரிச்மண்ட் அண்மையில் நேரில் சந்திக்கவில்லை; பைடனுக்கு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லாதது உறுதிசெய்யப்பட்டது என ஆட்சிமாற்றக் குழு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.