

கரோனா இரண்டாம் அலை காரணமாக கனடா நாட்டின் ஓன்டாரியோ மாகாணத்தில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல நாடுகளில் கரோனா இரண்டாம் அலை தாக்கம் இருப்பதால் தற்போதும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை காரணமாக கனடா நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான ஓன்டாரியோ மாகாணத்தில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 23ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் ஏற்கெனவே உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய புதிய அறிவிப்பின்படி பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் மூடப்பட உள்ளன.
மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆலோசிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.