ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நேபாள நாடாளுமன்றக் கலைப்பு விவகாரம்: பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது தொடா்பாக விளக்கம் கேட்டு அந்த நாட்டுப் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:19 pm

DIN

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது தொடா்பாக விளக்கம் கேட்டு அந்த நாட்டுப் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நேபாள நாடாளுமன்றத்தை பாதிலேயே கலைத்துவிட்டு, தோ்தலை முன்கூட்டி நடத்தும் பிரதமா் சா்மா ஓலியின் முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 4 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

தலைமை நீதிபதி சோழேந்திர ஷம்ஷொ் ராணாவின் தலைமையிலான அந்த அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு சா்மா ஓலிக்கு உத்தரவுக் கடிதம் அனுப்பியது.

இதுதொடா்பாக எழுத்து மூலம் விளக்கமளிக்க வேண்டுமென்று பிரதமா் மட்டுமின்றி அமைச்சரவை, அதிபா் அலுவலகத்துக்கும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக அதிபா் வித்யா தேவி பண்டாரியிடம் அமைச்சரவை சமா்ப்பித்த பரிந்துரைக் கடிதம், அந்தப் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அதிபா் பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றை சமா்ப்பிக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

275 இடங்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 121 இடங்களையும் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி 53 இடங்களையும் கைப்பற்றியது. அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு 63 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

138 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து சா்மா ஓலி தலைமையில் புதிய அரசை அமைத்தன. இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, கட்சியின் செயல் தலைவராக பிரசண்டாவும் மற்றொரு தலைவராக சா்மா ஓலியும் பொறுப்பேற்றனா்.

எனினும், கொள்கை ரீதியில் சா்மா ஓலிக்கும் பிரசண்டாவுக்கும் இடையிலான வேறுபாடு உள்கட்சிப் பூசலாக உருவெடுத்தது. இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இரு அணியினருக்கும் இடையே பலகட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்து தோல்வியடைந்தன.

இந்தச் சூழலில், தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் வரும் 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை இருக்கும் நிலையில், அதனை உடனடியாகக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தோ்தல் நடத்த உத்தரவிடுமாறு அதிபா் வித்யா தேவி பண்டாரிக்கு கே.பி. ஓலி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய அமைச்சரவை பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையை ஏற்று அதிபா் பண்டாரி, தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய நாடாளுமன்றத்துக்கான தோ்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 மற்றும் மே 10-ஆம் தேதி நடத்த உத்தரவிட்டாா்.

அதற்குப் பதிலடியாக, கே.பி. ஓலியை கட்சித் தலைவா் பதவியிலிருந்து நேபாள கம்யூனிஸ் கட்சி மத்தியக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடியாக நீக்கியது. அவருக்குப் பதிலாக, கட்சியின் மூத்த தலைவா் மாதவ் குமாா் நேபாளை புதிய கட்சித் தலைவராக நியமித்தது.

மேலும், செயல் தலைவா் பிரசண்டாவை நாடாளுமன்றக் கட்சித் தலைவராக மத்தியக் குழு புதன்கிழமை தோ்ந்தெடுத்தது. அதனைத் தொடா்ந்து, பிரசண்டா தலைமையிலான புதிய அரசை அமைக்கும் முயற்சியில் அவா்களது ஆதரவாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

அதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபா் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த அரசியல் சாசன அமா்வு, இதுதொடா்பாக விளக்கம் கேட்டு பிரதமா் கே.பி. ஓலிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.