ரஷியாவில் இன்று புதிதாக 29,018 பேருக்கு கரோனா
ரஷியாவில் இன்று புதிதாக 29,018 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரஷியாவில் இன்று புதிதாக 29,018 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 29,018 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4,543 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 7,315 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,92,706ஆக உயர்ந்துள்ளது. இன்று கரோனாவுக்கு மேலும் 563 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 53,659 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 27,397 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 23,98,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 88 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...