உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.16 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாக்கிழமை நிலவரப்படி 8,16,73,086 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 17,81,539 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 5,77,99,127 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,20,92,420 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,804 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,97,81,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,43,182 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 1,16,96,727 பேர் குணமடைந்துள்ளனர், 7,74,1,715 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 28,912 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியா 1,02,24,797 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,48,190 ஆக உள்ளது. இதுவரை 9,80,7,569 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் பிரேசில் தற்போது 1,91,641 உயிரிழப்புகளுன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

நீ சாரல் பாடல் வெளியானது!

மூவர் அரைசதம்: தில்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!

பூக்கட்டும் பாடல்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


