சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜொ்மனியில் கரோனா பலி புதிய உச்சம்

ஜொ்மனியில் தினசரி கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2020, 9:05 pm

DIN


பொ்லின்: ஜொ்மனியில் தினசரி கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,129 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.

நாட்டில் அந்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முந்தைய அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கை 962-ஆக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, ஜொ்மனியில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,420-ஆக உள்ளது. இதுவரை 16,91,707 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அவா்களில் 12,77,900 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 3,81,387 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 5,649 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.