அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 25 பேர் பலி

சிரியாவில் 3 பேருந்துகள் மீது பயங்கரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

News image

சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 25 பேர் பலி

Updated On :31 டிசம்பர் 2020, 10:44 am

சிரியாவில் 3 பேருந்துகள் மீது பயங்கரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் எல்லையான சிரியாவின் கிழக்கு டெய்ர் அஸ் சோர் மாகாணத்தில் உள்ள பிரதான சாலையில் சிரியப் படைவீரர்களை அழைத்துச் சென்ற பேருந்துகள் மீது புதன்கிழமை பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது ஐ.எஸ். பயங்கரவாதக் குழு என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சிரியாவின் முக்கிய பகுதிகளை இழந்த பின்னர், ஐ.எஸ் தீவிரவாதிகள் கிழக்கு சிரியாவில் உள்ள பாலைவன பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். எனினும் அவர்கள் அவ்வப்போது ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத் தளங்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.