தேவாலயம் மீதான தாக்குதலில் 10 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவிலுள்ள தேவாலயத்தின் மீது ஆயுதமேந்தி வந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு 10 பேரைக் கொன்றனர்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவிலுள்ள தேவாலயத்தின் மீது ஆயுதமேந்தி வந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு 10 பேரைக் கொன்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த மத விழாவில், சஹேல் பிராந்தியத்தின் யாகா மாகாணத்திலுள்ள தேவாலயத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தேவாலய போதகரை பணயக் கைதியாக இழுத்துச் சென்று பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வடக்கு பகுதியில் நிலவி வந்த அவசரநிலை ஜனவரி 12-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால் பயங்கரவாதத்தைத் எதிர்த்து, மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 13 பிராந்தியங்களில் ஏழு இடங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 700 பேர் பயங்கரவாத அமைப்புகளால் கொல்லப்பட்டுள்ளனர். அமைதியின்மை காரணமாக 270,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டுவிட்டதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...