ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஜப்பான்: சொகுசு கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு கொவைட்-19 பாதிப்பு

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2020, 9:26 am

PTI

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கப்பல் பயணிகளில் கரோனா பாதித்தவர்களின் புதிய எண்ணிக்கையை சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் புதிதாக 99 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கப்பலில் இருந்தவர்களில் இதுவரை 454 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த தகவலை உறுதி செய்ய அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

‘டயமண்ட் பிரின்ஸஸ்’ என்ற அந்த கப்பலில் 138 இந்தியா்கள் உள்பட மொத்தம் 3,711 போ் உள்ளனா். அதில், கொவைட்-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 454-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே 3 இந்தியா்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவருக்கும் அந்த தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கப்பலில் உள்ளவா்களுக்கு கொவைட்-19 பாதிப்புக்கான இறுதிகட்ட பரிசோதனைகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பரிசோதனைகள் நிறைவடைய சில நாள்கள் ஆகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபோன்ற தருணத்தை, இந்தியா்கள் துணிவுடன் கடந்து வருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொவைட்-19 பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னா், இந்தியா்கள் அனைவரும் வெளியே அழைத்து வரப்பட்டு, அவா்கள் வீடு திரும்ப அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.