ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கராச்சியில் கோர விபத்து: விஷ வாயு கசிந்து 11 பேர் பலி; பலருக்கு உடல் நலன் பாதிப்பு

பாகிஸ்தானின் தெற்குப் பகுதி நகரான கராச்சியில் விஷ வாயுக் கசிந்ததில் 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 9:08 am

PTI


கராச்சி: பாகிஸ்தானின் தெற்குப் பகுதி நகரான கராச்சியில் விஷ வாயுக் கசிந்ததில் 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கராச்சியின் கீமாரி பகுதியில் வசித்துவந்த பொதுமக்கள் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறி மருத்துவமனைகளுக்கு விரைந்தனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விஷ வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இது குறித்து விசாரித்து வரும் கராச்சி காவல்துறையினர், விஷ வாயுக் கசிவு குறித்து ஒரு துப்பும் துலங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.