ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கரோனா பாதித்தவர்களில் வயதானவர்களுக்குத்தான் உயிரிழப்பு அபாயம் அதிகம்

கரோனா வைரஸ் பாதித்தவர்களிலேயே 80 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குத்தான் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 12:24 pm

PTI


பெய்ஜிங்: கரோனா வைரஸ் பாதித்தவர்களிலேயே 80 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குத்தான் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவில்  பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,800 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 72 ஆயிரம் பேருக்கும் மேல் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் தொற்றுநோய் பரவல் குறித்து நேற்று வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், சீனாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கரோனா வைரஸ் பாதித்திருப்பவர்களில் பெரும்பாலானோர் 30 - 69 வயதுடையவர்களாக உள்ளனர்.  இவர்கள் தான் 77.8 சதவீதமாகும்.

இவர்களில் ஆண்கள் 51.4 சதவீதம் பேர், விவசாயிகள், தொழிலாளர்கள் 22% பேர்.

இவர்களில் 80 வயதுக்கு மேல் இருப்பவர்கள்தான், மரணமடைய அதிக அபாயம் இருப்பதாகவும், மற்ற வயதுடையவர்களின் மரண அபாயம் 15% ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நோய் பாதித்தவர்களில் மரணிக்கும் ஆண்களின் சதவீதம் 2.8% ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1.7% ஆகவும் உள்ளது.இதர நோய்கள் இருந்து அவர்களை கரோனா தாக்கும் போது அதிக உயிரிழப்பு நேரிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வைரஸ், வெறும் 30 நாட்களில், ஒரு நகர் முழுக்க பரவி, அங்கிருந்து ஒட்டுமொத்த நாட்டுக்கும் பரவியுள்ளது. பல நகரங்களையே ஒட்டுமொத்தமாக மூடும் அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது. ஒட்டுமொத்த மருத்துவமனைகளையும் கரோனா வைரஸ் சிகிச்சைக்கானதாக மாற்றிவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.