ரோம்: கரோனா வைரஸ் இத்தாலியில் பரவி வருவதையடுத்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் இதுவரை 2360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று, பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இத்தாலியில் வடக்கு மாகாணமான படுவா பகுதியில் 78 வயதுள்ள முதியவர் ஒருவர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார்.
இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவ துவங்கியுள்ளது. இத்தாலியில் 14 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இத்தாலியில் முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!

ஷாலிமாா் பாகில் சாலையோர சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படும்: முதல்வா் குப்தா

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


