சீனாவில் நிலநடுக்கம்: பலர் காயம்; கட்டடங்கள் சேதம்
சீனாவின் மேற்கு பகுதியான ஸின்ஜியாங் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்தனர். கட்டடங்கள் சேதமாகின.


பெய்ஜிங்: சீனாவின் மேற்கு பகுதியான ஸின்ஜியாங் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்தனர். கட்டடங்கள் சேதமாகின.
நேற்று இரவு அந்நாட்டு நேரப்படி 9.21 மணியளவில் நேரிட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மீட்க மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
இது குறித்து பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நிலநடுக்கத்தில் சிக்கி சிலர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறிய கட்டடங்களும், மதில்சுவர்களும் சேதமடைந்துள்ளன என்று தெரரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...