பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹஜ் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்: சவூதி அரசு அறிவிப்பு

ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனிதப்பயணத்தில் பங்குபெறும் ஹஜ் பயணிகளுக்கு, இந்த ஆண்டு கடுமையான  கட்டுப்பாடுகளை சவூதி அரசு அறிவித்துள்ளது.

News image

ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனிதப்பயணத்தில் பங்குபெறும் ஹஜ் பயணிகளுக்கு, இந்த ஆண்டு கடுமையான  கட்டுப்பாடுகளை சவூதி அரசு அறிவித்துள்ளது.

Updated On :6 ஜூலை 2020, 10:41 am

ரியாத்: ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனிதப்பயணத்தில் பங்குபெறும் ஹஜ் பயணிகளுக்கு, இந்த ஆண்டு கடுமையான  கட்டுப்பாடுகளை சவூதி அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஹஜ் புனிதப்பயணமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் ஹஜ் பயணத்தில் உலகம் முழுவதிலும் இருந்து சராசரியாக இருபது லட்சம் பேர் பங்குபெறுவது வழக்கம். இதன்மூலம் அந்நாட்டு அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு கடுமையான  கட்டுப்பாடுகளை சவூதி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த முறை ஹஜ் பயணத்திற்கு சவூதி குடிமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சவூதி குடிமக்கள் அல்லாதவர்கள் முன்னரே சவூதி எல்லைக்குள் வசித்து வந்தால், ஹஜ் பயணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 1000 என்று நிர்ணயிக்கப்படுகிறது.

சமூக இடைவெளி விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும்.  

புனித அடையாளமான காபாவை பயணிகள் கையால் தொடுவது தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.