பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சீனாவின் தடுப்பூசி உலகளாவிய பொது பொருளாகிவிடும்

சீனா ஆராய்ந்து தயாரிக்கும் கரோனா தடுப்பூசி உலகளாவிய பொதுப் பொருளாக வழங்கப்படும் என்று 73ஆவது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வாக்குறுதி அளித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூலை 2020, 8:55 am

DIN

சீனா ஆராய்ந்து தயாரிக்கும் கரோனா தடுப்பூசி உலகளாவிய பொதுப் பொருளாக வழங்கப்படும் என்று 73ஆவது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால், அமெரிக்க சட்டத் துறை அமைச்சர் வியாழக்கிழமை உரை நிகழ்த்திய போது, சீனாவைச் சேர்ந்த நபர் கள்ளத்தனமாக அமெரிக்க இணைய இணைப்புகளில் நுழைந்து  கரோனா வைரஸ் தடுப்பூசித் தொடர்பான தகவல்களைத் திருடிக் கொண்டதாகக் கூறினார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் கூறுகையில், கரோனா தடுப்பூசி ஆய்வில் சீனா உலக முன்னணியில் உள்ளது. அமெரிக்காவின் தரவுகளைத் திருடத் தேவையில்லை என்றும், குற்றஞ்சாட்டினால் முதலில் சான்றுகளை வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.