ஜனவரிக்குள் கரோனா தடுப்பூசி தயாராகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொதுவெளியில் முகக்கவசத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொதுவெளியில் முகக்கவசத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கோவிட் -19 தடுப்பூசி தயாரிக்கப்படும் வட கரோலினா ஆய்வகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ட்ரம்ப். வடக்கு கரோலினாவில் உள்ள மோரிஸ்வில்லேவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக முகக்கவசத்துடன் பங்கேற்றார்.
இதற்கு முன் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அறிவியலாளர்கள்,பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் முகக்கவசம் அணிந்த போதிலும் ட்ரம்ப் மட்டுமே முகக்கவசம் அணியாமல் பங்கேற்றது வெகுவாக விமர்சனத்திற்குள்ளானது.
கரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து விமர்சனங்கள் எழுந்த போதிலும், “அமெரிக்கா மட்டுமே உண்மையான கரோனா தரவுகளை வெளியிடுகிறது.மற்ற நாடுகள் வெளியிடும் கரோனா தரவுகளில் உண்மைத்தன்மை இல்லை.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கவசத்துடன் பங்கேற்பது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “கரோனா தடுப்பூசியை கண்டறிவதில் அமெரிக்கா முனைப்பாக செயல்படுகிறது. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கரோனா தடுப்பூசி தயாராகிவிடும்.” என நம்பிக்கைத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...