திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

2021 ஜூன் வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: கூகுள் அறிவிப்பு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஜூன் வரை வீட்டில் இருந்தே பணியாற்ற கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
2021 ஜூன் வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: கூகுள் அறிவிப்பு
Updated On :28 ஜூலை 2020, 9:28 am

DIN

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஜூன் வரை வீட்டில் இருந்தே பணியாற்ற அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அலுவலகம் வந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாத பணியாளர்கள் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று கூகுள் தனது ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, உலகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளித்தது. அதன்படி, கூகுள் ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், கரோனா தாக்கம் குறைந்ததும் கடந்த ஜூன் மாதத்தில் அலுவலகங்களை திறக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக கடந்த மே மாதம் அறிவித்தது. ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதி வரை அலுவலகம் வந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாத ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அல்ஃபாபெட்-டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் முக்கியக் குழு செயல் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தி, 2021, ஜூன் வரை அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்குவது என்று முடிவெடுத்து அறிவித்துள்ளார்.

இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தற்சமயம் பணியாளர்களால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், வீட்ல் இருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021, ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஊழியர்களுக்கும் இது பற்றி மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.