மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 18 லட்சத்தைத் தாண்டியது; பலி 1.05 லட்சமாக உயர்வு!

அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

DIN

அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 647 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 647 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,05,003 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 18,08,291 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 6.15 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.