ஜார்ஜியாவில் வெள்ளிக்கிழமை சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது, இண்டியானாவுக்கு இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் புளோரிடாவின் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை சிறிய ரக விமானத்தில் சென்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.
விமானம் அட்லாண்டாவின் தென்கிழக்கில் சுமார் 100 மைல் (161 கிலோமீட்டர்) தொலைவில் ஜார்ஜியா வான்பகுதியில் சென்றபோது, திடீரென தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர்.
புத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. சிதறிய விமான பாகங்கள் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தன.
அந்த விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.
பலியானவர்கள் புளோரிடாவின் மோரிஸ்டனைச் சேர்ந்த லாரி ரே ப்ரூட் (67), புளோரிடாவின் கெய்னெஸ்வில்லியைச் சேர்ந்த ஷான் சார்லஸ் லாமண்ட்(41), அவரது மனைவி ஜோடி ரே லாமண்ட்(43) மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் ஜெய்ஸ்(6) மற்றும் ஆலிஸ்(4).
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


