அமெரிக்காவை விஞ்சும் பிரேசில்: ஒரேநாளில் 27,075 பேருக்கு தொற்று; 904 பேர் பலி
பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 904 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 904 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 904 பேர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 35,930 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 27,075 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,72,846 ஐ எட்டியுள்ளது. அந்நாட்டில் சுமார் 3.02 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 749 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...