கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானில் புதிதாக 5,000 பேருக்குத் தொற்று: 1.40 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா தொற்று நோய்க்கு மேலும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,44,646 ஆக உயர்ந்துள்ளது என்று திங்களன்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

PTI

பாகிஸ்தானில் கரோனா தொற்று நோய்க்கு மேலும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,44,646 ஆக உயர்ந்துள்ளது என்று திங்களன்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தேசிய சுகாதார அமைச்சகத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 29,085 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அந்த நாட்டில் 8,97,650 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மொத்த பாதிப்புகளில், பஞ்சாபில் 54,138, சிந்து 53,805, கைபர்-பக்துன்க்வா 18,013, இஸ்லாமாபாத் 8,569, பலூசிஸ்தான் 8,177, கில்கிட்-பால்டிஸ்தான் 1,129 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 647 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 97 நோயாளிகள் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,729 ஆக உள்ளது, மேலும் 53,721 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.