உலகளவில் கரோனா பாதிப்பு 87.65 லட்சத்தை எட்டியது!
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 87.65 லட்சத்தைத் தாண்டியுள்ளது.


உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 87.65 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகளவில் கரோனாவால் 87,65,473 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,62,688 பேர் மரணம் அடைந்துள்ளனர். 46,27,860 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 22,97,190 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,21,407 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,38,568 பேரும், ரஷ்யாவில் 5,69,063 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3,95,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,970 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...