சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரஷியாவில் புதிதாக 7,425 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,425 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,99,705 ஆக அதிகரித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2020, 10:46 am

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,425 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,99,705 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக  8 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,425 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 5,99,705 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 8,359 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தற்போதுவரை 3,56,429 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.