மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஷியாவில் ஒரேநாளில் 7,176 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 6 லட்சத்தைத் தாண்டியது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,176 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,06,881 ஆக அதிகரித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜூன் 2020, 11:19 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,176 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,06,881 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,176 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 6,06,881 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 8,513 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தற்போது வரை 3,68,822 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.